/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகள்
/
பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகள்
ADDED : ஜன 13, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; காட்டுப் பன்றிகளால் நெற்பயிர்கள் சேதமடைவதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
திருவாடானை அருகே என்.மங்கலம், புலியூர், ஆக்களூர் உள்ளிட்ட பல்வேறு கண்மாய் பகுதியில் விவசாயப் பணிகள் நடந்துள்ளது. நெற்பயிர்கள் முற்றிய நிலையில் காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களை சேதபடுத்துகின்றன. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
கண்மாய்களில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வயல்களில் தங்கி பாதுகாக்கிறோம். இரவில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து சேதப்படுத்துகின்றன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு வேலியை தாண்டி வயல்களுக்கு சென்று சேதப்படுத்துவதால் கவலையாக உள்ளது என்றனர்.