ADDED : அக் 16, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை-செங்கமடை ரோட்டில் நேற்று முன்தினம் இரவு வாகனம் மோதி மரநாய் இறந்து கிடந்தது.
காலையில் அப்பகுதி வழியாக சென்ற சிலர் அதை அப்புறப் படுத்தினர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த வகையான நாய்கள் இரவில் மட்டும் நட மாடும். கடும் இருட்டிலும் பார்க்கும் சக்தி இதற்கு உண்டு.
இவை அரிய வகை உயிரினம். நேற்றுமுன் தினம் கண்மாய் பகுதி யிலிருந்து வெளியேறி வந்த இந்த மரநாய் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து உள்ளது என்றனர்.