தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வன உயிரினங்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நிறைவு

 வன உயிரினங்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நிறைவு

 வன உயிரினங்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நிறைவு


ADDED : ஜன 28, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் வனமும், வனஉயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சியின்நிறைவு விழா கலெக்டர் அலுவலகத்தில் தனியார் பள்ளியில் நடந்தது.

கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.அமைச்சர் ராஜகண்ணப்பன் மாணவர்களுக்குபாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாவட்டத்தில் 25 அரசு பள்ளிகளைசேர்ந்த மாணவர்களுக்கு வன உயிரினங்களின் பாதுகாப்பு,சவால்களும் தீர்வுகளும் குறித்த விழிப்புணர்வு பயிற்சிஅளிக்கப்பட்டுள்ளது.மாவட்ட வன உயிரினகாப்பாளர் அகில்தம்பி, முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்டவன அலுவலர் (பொ) மகேந்திரன், வனத்துறை அலுவலர்கள்பங்கேற்றனர்.

'எஸ்கேப்' ஆன அமைச்சர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன்செய்தியாளர்களை சந்தித்து காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த சுடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.அப்போது செய்தியாளர்கள் மதுரையில் எம்.எல்.ஏ., தளபதி காங்.,கட்சி பற்றி கூறிய கருத்து, அதற்கு காங்., மாநில தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் குறித்தும், தி.மு.க., காங்.,கூட்டணி இடையே முட்டல் மோதல் அதிகரித்து வருகிறதே என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் அதெல்லாம் ஒன்னும் இல்லை என அங்கிருந்து வேகமாக அமைச்சர்புறப்பட்டுச் சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us