/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மேல்பனையூர் பாலம் ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கப்படுமா
/
மேல்பனையூர் பாலம் ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கப்படுமா
மேல்பனையூர் பாலம் ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கப்படுமா
மேல்பனையூர் பாலம் ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கப்படுமா
ADDED : ஆக 09, 2025 03:18 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேல்பனையூரில் பாலம் அருகே திருச்சி-ராமேஸ்வரம் நான்கு ரோட்டில் விபத்தை தடுக்க சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்.
திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மேல்பனையூர் விலக்கு பகுதியில் நான்கு திசைகளிலும் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வகையில் ரோடு வசதி உள்ளது. அப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்கள், பிரிவு சாலை இருப்பது தெரியாமல் அதிவேகமாக செல்கின்றன.
இணைப்பு சாலைகளில் உள்ள கிராமங்களுக்கு செல்வதற்காக திரும்பும் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்துக்கள் நடக்கிறது. எனவே, விபத்துகளை தடுக்கும் விதமாக தேசிய நெடுஞ்சாலை மேல்பனையூர் விலக்கு நான்கு பிரிவு சாலையில் சென்டர் மீடியன் அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.