/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதுரையை மையமாகக்கொண்டு வேளாண் பல்கலை அமையுமா தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா

ADDED : ஏப் 20, 2025 03:03 AM
ராமநாதபுரம்: தேர்தலில் தி.மு.க., அளித்த வாக்குறுதியின் படி மதுரையில் வேளாண் பல்கலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கோவையில் மட்டும் வேளாண் பல்கலை உள்ளது. 2வது வேளாண் பல்கலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சி, அரியலுார், தஞ்சை மாவட்டங்களுக்கு வசதியாக வேளாண் பல்கலை மதுரையில் அமைக்க வேண்டும், மதுரையில் வேளாண் பல்கலை கோரிக்கை அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தி.மு.க., குறிப்பிட்டிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் கூறினர்.
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு முத்துராமலிங்கம் கூறுகையில், தென் மாவட்டங்களில் வேளாண் தொழிலே பிரதானமாக இருந்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிப்படி மதுரையை மையமாகக்கொண்டு ஒரு வேளாண் பல்கலை அமைக்க வேண்டும் என்றார்.