/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல் கருவி வழங்கப்படுமா
/
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல் கருவி வழங்கப்படுமா
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல் கருவி வழங்கப்படுமா
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல் கருவி வழங்கப்படுமா
ADDED : செப் 05, 2025 11:20 PM
திருவாடானை: காய்ச்சல் மற்றும் உடல் பாதிப்பின் தன்மையை துல்லியமாக கண்டறிய அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கும் செல்கவுன்டர் கருவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
திருவாடானை, தொண்டி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை மற்றும் வெயிலின் தாக்கம் என சீதோஷ்ண நிலை மாறி மாறி உள்ளது. இதனால் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு அதிகமாக உள்ளது.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொலைதுாரத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று நோய்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
திருவாடானை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு பிறகு நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கப் படுகின்றன. சில நாட்களில் மாத்திரை தட்டுப்பாடும் ஏற்படுகிறது.
இதுதவிர திருவெற்றியூர், மங்களக்குடி, எஸ்.பி. பட்டினம், பாண்டுகுடி, வெள்ளையபுரம் ஆகிய சுகாதார நிலையங்களில் காய்ச்சல் என்ன வகை என்பதை கண்டறியும் வகையில் செல்கவுன்டர் கருவி இல்லை.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறிய தாவது:
கிராமங்களில் வசிப்போர் காய்ச்சல், தொடர் உடல் பாதிப்பால் சிரமப்படுகின்றனர். என்ன வகையான காய்ச்சல் என்பதை கண்டறிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் துல்லிய வசதிகள் இல்லை. திருவாடானை அரசு மருத்துவ மனை மற்றும் தொண்டி அரசு மேம்படுத்தபட்ட மருத்துவமனையில் மட்டுமே உள்ளது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சலை துல்லியமாக கண்டுபிடிக்கும் வகையில் செல்கவுன்டர் கருவி வழங்க வேண்டும் என்றனர்.