/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் உள்ள ஊருணிகளில் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தப்படுமா
/
ஊராட்சிகளில் உள்ள ஊருணிகளில் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தப்படுமா
ஊராட்சிகளில் உள்ள ஊருணிகளில் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தப்படுமா
ஊராட்சிகளில் உள்ள ஊருணிகளில் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தப்படுமா
ADDED : டிச 06, 2024 05:22 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏராளமான ஊருணி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
ஊராட்சியில் உள்ள கிராமங்களில் உள்ள ஊருணிகளில் காலை, மாலை நேரங்களில் குளிப்பதற்காக கிராமப் பொதுமக்கள் பெண்கள் படித்துறையில் அதிகம் குவிக்கின்றனர்.
இந்நிலையில் குளித்து முடித்தவுடன் திறந்த வெளியில் ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றுவதற்கு சிரமப்படுகின்றனர். தன்னார்வலர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குரிய ஊருணி கரைப்பகுதிகளில் பெண்களுக்கான தற்காலிக உடைமாற்றும் தடுப்பு அறைகளை ஏற்படுத்த வேண்டும். திறந்த வெளியில் பெண்கள் உடை மாற்றுவதால் பெரும் சிரமப்படுகின்றனர்.
அதிக ஆழமுள்ள இடங்களில் குளிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை விழிப்புணர்வு பலகைகளை அமைக்க வேண்டும். சமீபத்தில் ஏராளமான ஊருணிகளில் துார் வாரியதால் 10 முதல் 25 அடி ஆழத்திற்கு நீரின் ஆழம் உள்ளது. இதை அறியாமல் குளிப்பவர்களால் விபத்து அபாயம் நிலவுகிறது.
எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் இதற்கான குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்றனர்.