/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாரம்பரியமான நெசவுத் தொழிலை பாதுகாக்குமா மத்திய, மாநில அரசுகள்
/
பாரம்பரியமான நெசவுத் தொழிலை பாதுகாக்குமா மத்திய, மாநில அரசுகள்
பாரம்பரியமான நெசவுத் தொழிலை பாதுகாக்குமா மத்திய, மாநில அரசுகள்
பாரம்பரியமான நெசவுத் தொழிலை பாதுகாக்குமா மத்திய, மாநில அரசுகள்
ADDED : ஆக 07, 2025 05:29 AM
பரமக்குடி : பாரம்பரிய கைத்தறி நெசவு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நெசவாளர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைத்தறித்துறை நாட்டின் வளமான மற்றும் மாறுபட்ட கலாசாரத்தின் பாரம்பரிய அடையாளம். கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 70 சதவீதம் பெண்கள் சுயசார்புடன் வாழ கைத்தறி நெசவு தொழில் பேருதவியாக உள்ளது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப கைத்தறி துறையில் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகிறது.
1905ம் ஆண்டு ஆக.,7ல் சுதேசி இயக்கம் துவங்கப்பட்டது. தொடர்ந்து நெசவாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி 2015 ஆக.,7ம் தேதியை தேசிய கைத்தறி தினமாக கொண்டாட அறிவித்தார். நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் கைத்தறியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. மேலும் பருத்தி உள்ளிட்ட விவசாய துறையுடன் தொடர்பு உள்ள துறையாகும்.
தலைமுறையை பாதுகாக்கும் பல நுாற்றாண்டு தொடர்புடைய நெசவாளர்களை பாதுகாக்க, விலைவாசி குறியீட்டின் படி கூலி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் புகுத்துவதை தடுக்க, கைத்தறி அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு நெசவாளருக்கும் தனது வீடு தொழில் கூடமாக உள்ளதால், அனைவருக்கும் பசுமை வீடுகளை உறுதி செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் இருந்து வருடம் முழுவதும் நெசவாளர்களுக்கு வேலை வழங்கும் வகையில் உடனுக்குடன் கைத்தறி துணிகளை கோ ஆப்டெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கொள்முதல் செய்ய கமிட்டி அமைக்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5000 வழங்க வேண்டும். அனைத்து நெசவாளர்களுக்கும் ஆயுள் காப்பீடு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.