/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் மாற்றப்படுமா
/
ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் மாற்றப்படுமா
ADDED : ஏப் 18, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்:
முதுகுளத்துாரில் பரமக்குடி ரோடு பிள்ளையார் கோயில் அருகே இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் அதனை மாற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
முதுகுளத்துார் -பரமக்குடி ரோடு பிள்ளையார் கோயில் அருகே இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து உள்ளது. வேகமாக காற்றடித்தால் விழுந்து விடும் அச்சத்தில் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு புதிய மின்கம்பம் இறக்கி வைக்கப்பட்டு தற்போது வரை மாற்றப்படாமல் உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.