/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பருவம் தவறி பெய்த மழையால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு; அரசு நிவாரணம் வழங்குமா
/
பருவம் தவறி பெய்த மழையால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு; அரசு நிவாரணம் வழங்குமா
பருவம் தவறி பெய்த மழையால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு; அரசு நிவாரணம் வழங்குமா
பருவம் தவறி பெய்த மழையால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு; அரசு நிவாரணம் வழங்குமா
ADDED : ஏப் 26, 2025 04:24 AM
ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பிப்., மார்ச் மாதங்களில் பெய்த மழையால் மிளகாய் சோடையானது. இதனால் அரசு பேரிடர் நிவாரண நிதியாக ஏக்கருக்கு ரூ.35ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இம்மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் சாகுபடி நடக்கிறது. அதிக காரத்தன்மை காரணமாக ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. செப்., அக்., நவ., மாதங்களில் மிளகாய் சாகுபடி துவங்கி பிப்., மார்ச் மாதங்களில் அறுவடை நடக்கும்.
இந்நிலையில் இந்தாண்டு பருவம் தவறி பிப்., மார்ச் மாதங்களில் பெய்த மழையால் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்துார், கமுதி, சிக்கல் உள்ளிட்ட இடங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ராமநாதபுரத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் முத்துராமலிங்கம் கூறியதாவது:
விளைச்சல் நேரத்தில் பெய்த மழையால் செடிகள் அழுகி விட்டன. பழங்களை களத்தில் உலர வைத்தப்போது மழையால் நனைந்து மிளகாய் சோடையாகி விட்டன. ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவழித்த விவசாயிகள் இழப்பை சந்தித்துள்ளனர். ஆனால் வடகிழக்கு பருவமழை பாதிப்பை மட்டுமே அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர். பருவம் தவறிய மழையால் மிளகாய் சேதம் குறித்து இதுவரை அதிகாரிகள் கணக்கெடுப்பு கூட நடத்தவில்லை. எனவே உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியாக ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.

