/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆபத்தான கிணற்றில் நீர் இறைக்கும் கிராம மக்கள் சீரமைக்குமா ஊராட்சி நிர்வாகம்

ADDED : நவ 18, 2024 06:38 AM

சிக்கல் : சிக்கல் அருகே சிறைக்குளம் ஊராட்சி ஆய்க்குடியில் சேதமடைந்த சிமென்ட் பிளாட்பாரத்தில் நின்று ஆபத்தான நிலையில் தண்ணீர் இறைப்பதால் விபத்து அபாயம் உள்ளது.
இங்கு எம்.ஜி.என்.ஆர்.எஸ்., திட்டத்தில் ரூ.3 லட்சத்தில் புதிய கிணறு அமைக்கப்பட்டது. ஆய்க்குடி கிராம கண்மாய் கரை ஓரத்தில் பொதுமக்கள் குடிப்பதற்காகவும் மற்றும் புழக்கத்திற்காகவும் பயன்படுத்தக்கூடிய இந்த கிணறு 2021ல் அமைக்கப்பட்டது.
தரமற்றதாக கட்டப்பட்டதால் கிணற்றின் பிளாட்பாரம் பகுதி இடிபாடுகளுடன் உள்ளது.
ஆய்க்குடி கிராம மக்கள் கூறியதாவது:
கிணற்றில் தினந்தோறும் மக்கள் குடங்களில் தண்ணீர் சேகரித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பத்தடி அகலம் கொண்ட இந்த வட்ட கிணற்றில் பக்கவாட்டு பிளாட்பார சுவர் அந்தரத்தில் ஆபத்தான நிலையில் உள்ளது.
கிணற்றில் பொதுமக்கள் கொண்டு வரும் வாளியில் தண்ணீர் இறைக்கும் போது விபத்து அபாயம் உள்ளதால் அச்சத்துடன் பயன்படுத்த வேண்டி உள்ளது.
எனவே சிறைக்குளம் ஊராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியை சீரமைக்க வேண்டும் என்றனர்.