/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வைகையில் மூன்றாவது முறையாக பெருக்கெடுத்த மழை நீர் நீர்வழி ப் பாதை முறைப்படுத்தப்படுமா

ADDED : டிச 19, 2024 04:41 AM

பரமக்குடி: பரமக்குடியில் இரண்டு மாதங்களில் மூன்றாவதுமுறையாக வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுக்கும் நிலையில் நீர் வழி தடங்களை முறைப்படுத்த பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடியில் பருவமழை பொய்த்த நிலையில் நவ., மாதம் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வைகையில் தண்ணீர் வந்தது. தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கான பங்கிட்டு நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்உருவாகிய சூழலில் மாவட்டத்தில் அதிகளவு மழைப்பொழிவு உள்ளது. மேலும் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பெய்த கனமழையால் டிச.15ல் 3வது முறையாக மீண்டும் பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நீர் பரமக்குடி வைகை ஆறு வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாயை நோக்கி பெருக்கெடுத்தது. மேலும் வலது, இடது பிரதான கால்வாய்கள் உட்பட வெள்ள போக்கி கால்வாயாக உள்ள பரளை ஆற்றிற்கும் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் வைகை ஆறு உட்பட கால்வாய் வழித்தடங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் இன்னும் தண்ணீர் வீணாகும் நிலையே உள்ளது. ஆகவே வரும் நாட்களில் அனைத்து வகையிலும் நீர் வழித் தடங்களை புனரமைத்து, கண்மாய்களுக்கு தண்ணீரைக் கொண்டு சேர்க்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.