/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் பராமரிப்பில்லாத ஊருணிகள் சீரமைக்கப்படுமா! குவியும் குப்பை, கழிவுநீரால் சுகாதாரக்கேடு

ADDED : ஜன 05, 2025 11:51 PM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீரை சேமிக்கும் வகையில் ஏராளமான ஊருணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தற்போது முறையாக பராமரிப்பு செய்யாததால் வரத்து கால்வாய்கள் துார்ந்து, குப்பை கொட்டுதல், கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. அம்மாதிரியான ஊருணிகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர், கிராமங்களில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க சங்கிலி தொடர் போல் மன்னர்கள் காலத்தில் ஊருணிகளை அமைத்தனர். நிலத்தடி நீர் மட்டம் மேம்படுத்தப்பட்டு வந்தது. குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. தற்போது மக்கள் தொகை பெருக்கம் காரணமாக ஊருணிகள் இருந்த வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களாக மாறிவிட்டன. மழை நீர் வெளியில் செல்ல வழியில்லாமல் குடியிருப்புகளில் தேங்குகிறது. கழிவு நீர் அனைத்தும் ஊருணிகளுக்குள் கலந்து சேர்ந்து சுகாதாரக்கேடும் துர் நாற்றமும் வீசுகிறது.
ஊருணியில் இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகள், என அனைத்து குப்பையும் கொட்டுகின்றனர். மழைக்காலத்தில் நீர் நிரம்பி வழிகின்றன. இருந்தும் குப்பை, கழிவு நீர் கலப்பு காரணமாக துார் நாற்றம் வீசுவதால் மக்களால் ஊருணிப்பகுதியில் குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
தேங்கியுள்ள தண்ணீர் அசுத்தமாகியுள்ளதால் கோடை காலங்களில் கால்நடைகளுக்கு கூட இந்த தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அனைத்து ஊருணிகளையும் துார் வாரி, பொதுமக்கள் குப்பை கொட்டாமல் பாதுகாத்து கோடைகாலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.