/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோரிக்கைகள் இடம்பெறுமா? தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
/
கோரிக்கைகள் இடம்பெறுமா? தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
கோரிக்கைகள் இடம்பெறுமா? தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
கோரிக்கைகள் இடம்பெறுமா? தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
ADDED : மார் 19, 2024 10:35 PM
திருவாடானை : ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தேர்தல் அறிக்கை குழுவிடம் கொடுத்த மனு, தி.மு.க., அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வெளியாகுமா என ஆவலாக எதிர்பார்த்துள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கு தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்கும் பணி நடந்தது.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சென்ற விவசாயிகள் அக்குழுவிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ைஹட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தக் கூடாது.
தெலுங்கானா மாநிலம் போல் ரைத்துபந்து எனும் பட்டாதாரர்களுக்கு பருவத்திற்கு 5000 ரூபாய் வழங்கும் மானிய திட்டம் போல் தமிழகத்திலும் வழங்கவேண்டும்.
உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதால் நெல்லின் ஆதார விலையை குவிண்டாலுக்கு 3000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவரி குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி ஆறு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதரத்தை காப்பாற்ற வேண்டும்.
வைகை நீர் வீணாக செல்வதை தடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று பெரிய தடுப்பணைகள் கட்டவேண்டும்.
1500 யூனியன் கண்மாய்களை நீர்வளத்துறையின் கீழ் சேர்த்து துார்வார வேண்டும். புதிதாக நவீன அரவை அரிசி ஆலை அமைக்கவேண்டும்.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வரும் வைகை நீரை, திருவாடானை தாலுகாவிற்கு கொண்டு வரவேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
இக் கோரிக்கைகள் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெறுமா என ஆவலுடன் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

