/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடவடிக்கை எடுப்பார்களா; மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்; சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் தாளில் உணவு பார்சல்

ADDED : நவ 20, 2024 06:31 AM
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹோட்டல்கள் மற்றும் பாஸ்ட் புட் உணவகங்களில் அதிகளவு உணவு பார்சல்களுக்கு பிளாஸ்டிக் தாள் மற்றும் சில்வர் பேப்பரை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பெருவாரியாக ஓட்டல்களில் வாழை இலையை பார்சலுக்கு பயன்படுவதற்கு பதில் பிளாஸ்டிக் தாள், சில்வர் பேப்பர்களை பயன்படுத்தும் போக்கு தொடர்கிறது.
சில்வர் தாள்களில் சூடாக பிரியாணி, பரோட்டா, சாதம், இட்லி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வைக்கும் போது அவற்றில் உள்ள ரசாயனம் உணவுப் பொருள்களில் கலந்து விடுகிறது. இவற்றை உட்கொள்வதால் புற்று நோய், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், அஜீரணக் கோளாறு உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது.
எனவே இயற்கையாக கிடைக்கக்கூடிய வாழை இலையை அனைத்து உணவு பதார்த்தங்களிலும் பயன்படுத்தினால் தான் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். எளிதில் மட்கவும் செய்யும். கால்நடைகளுக்கு உணவாகவும் பயன்படும்.
எனவே உணவு கலப்பட தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஓட்டல்கள், பாஸ்ட் புட் கடைகளிலும் பார்சல்களாக பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.