/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயனற்ற சுகாதார வளாகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா
/
பயனற்ற சுகாதார வளாகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா
பயனற்ற சுகாதார வளாகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா
பயனற்ற சுகாதார வளாகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா
ADDED : அக் 23, 2024 04:13 AM
பரமக்குடி: பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார வளாகங்கள் பெரும்பாலும் பூட்டப்பட்டுள்ள நிலையில் சுகாதாரம் கருதி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் நிலையில் வெளியிடங்களில் இருந்து தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பொது இடங்களில் கழிப்பறை, குளியல் அறைகளை உள்ளடக்கிய சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பிரதமரின் துாய்மை இந்தியா திட்டத்திலும் சுகாதாரப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி தினமும் மக்கும், மக்காத குப்பையை பொதுமக்கள் பிரித்து வழங்குகின்றனர். ஆனால் நகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு சுகாதார வளாகங்கள் செயல்படாமல் பூட்டி இருக்கும் நிலை உள்ளது.
இங்கு தண்ணீர் இல்லாத நிலை இருப்பதுடன், வளாக கட்டடம் மற்றும் கழிப்பறை சேதம் உள்ளிட்ட காரணங்களால் பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டுள்ளது. இதனால் விழாக் காலங்கள் உட்பட சந்தை நாட்களில் பொதுமக்கள் இயற்கை உபாதை கழிக்க இன்னலுக்கு ஆளாகின்றனர்.
ஆகவே துாய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் நோக்கில் உடனடியாக கழிப்பறைகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.