
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் பள்ளிவாசல் தெரு, தர்ம முனீஸ்வரர் கோயில் எதிரில் மின் கம்பத்தின் மேல் பகுதி முறிந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
பள்ளிவாசல் மற்றும் கோயிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில் அச்சமடைந்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. உயிர் சேதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

