/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மேல்நிலைப்பள்ளி இன்றி அபிராமம் மாணவர்கள் அவதி
/
அரசு மேல்நிலைப்பள்ளி இன்றி அபிராமம் மாணவர்கள் அவதி
அரசு மேல்நிலைப்பள்ளி இன்றி அபிராமம் மாணவர்கள் அவதி
அரசு மேல்நிலைப்பள்ளி இன்றி அபிராமம் மாணவர்கள் அவதி
ADDED : மார் 17, 2024 11:45 PM
கமுதி : அபிராமம் பேரூராட்சி மையமாக வைத்து அரசு, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இல்லாததால், அரசின் சலுகைகள் பெற முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அபிராமம் பேரூராட்சி, அதனைச் சுற்றியுள்ள அச்சங்குளம், நத்தம், சடையனேந்தல், நெடுங்குளம், மணலுார், உடையநாதபுரம், நல்லுார், மேலகன்னிச்சேரி, மேலக்கொடுமலுார் விக்கிரபாண்டிய புரம், நல்லுகுறிச்சி உட்பட 50 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயம், கூலி தொழில் செய்கின்றனர். அபிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மட்டும் செயல்படுகிறது.
அதற்கு பின்பு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி படிப்பதற்காக மாணவர்கள் வேறு வழியின்றி தனியார் பள்ளியில் படிக்கின்றனர். இதனால் அரசின் சலுகைகள் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.
அப்பகுதி சேர்ந்த அருணாச்சலம் கூறியதாவது, அபிராமத்தில் 50 ஆண்டுகளாக அரசு நடுநிலைப்பள்ளி மட்டும் உள்ளது. மாணவர்கள் மேல்நிலைப்பள்ளிக்காக கமுதி, பரமக்குடி, முதுகுளத்துாரில் படிக்கும் அவலநிலை உள்ளது. அரசு பள்ளி இல்லாததால் தமிழக அரசின் சலுகைகளான மருத்துவம், பொறியியல் படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் படிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தொடர்ந்து மனுக்கள் கொடுத்தும் பலனில்லை. கிராமசபை கூட்டங்களில் 20 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

