/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி
/
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி
ADDED : மே 13, 2025 12:44 AM

ராமநாதபுரம் : தொண்டியை சேர்ந்த சபீனா 27, தனது வீட்டில் திருடுபோன நகை, பணத்தை மீட்டுத்தராமல், போலீசார் அலைகழிப்பு செய்வதாக கூறி கலெக்டர் அலுவலக 2வது மாடியிலிருந்து குதிக்க முயன்றார். அவரை போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்.
தொண்டி கிழக்குதெருவைச்சேர்ந்த சபீனா 27, அவரது தாயார்பகுர்சகான்பீவி 65 ஆகியோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளிக்க வந்தனர். அப்போது திடீரென சபீனா பழைய கலெக்டர்அலுவலக 2வது மாடிக்கு ஏறிச்சென்று, எனது வீட்டில் ஜன. 19ல் நகைதிருடியவரை கைது செய்யவில்லை, என்னால் வாழமுடியவில்லை குதித்து சாகப்போவதாக கூச்சலிட்டார். சில இளைஞர்கள், போலீசார் வேகமாக மாடிக்கு சென்று சபீனாவை பத்திரமாக மீட்டு கீழே அழைத்துவந்தனர்.
இதுகுறித்து சபீனா கூறுகையில், எங்கள் வீட்டில் 6.5 பவுன் நகை, ரூ.12ஆயிரம் பணம் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து தொண்டி போலீசார் புகார் அளித்தேன். 90நாட்களாக அலைகிறேன்.
திருடிய நபர் குறித்து அடையாளம் காட்டியும் தொண்டி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு மனநலம் பாதித்துள்ளதாக சில போலீசார் தகாத வார்த்தைபேசினர். எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்னை சாகவிடுங்கள்என்றார்.
சபீனாவை அழைத்துசென்று ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.