ADDED : நவ 11, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்,: ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராகுல்காந்தி மனைவி திலகவதி, 27. இவர்களுக்கு 6 மற்றும் 4, வயதில் ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று, ரோட்டோரமாக அந்த பெண் சென்ற போது, மூடப்படாத கழிவுநீர் கால்வாயில் விழுந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் அவரை மீட்ட பொதுமக்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கவும், திறந்துள்ள கழிவுநீர் கால்வாய்களை மூடவும் வலியுறுத்தி, கிராமத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.