/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கணவரை இழந்து சிரமப்படும் பெண் சத்துணவு வேலை வழங்க கோரிக்கை
/
கணவரை இழந்து சிரமப்படும் பெண் சத்துணவு வேலை வழங்க கோரிக்கை
கணவரை இழந்து சிரமப்படும் பெண் சத்துணவு வேலை வழங்க கோரிக்கை
கணவரை இழந்து சிரமப்படும் பெண் சத்துணவு வேலை வழங்க கோரிக்கை
ADDED : ஏப் 18, 2025 05:39 AM

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மோர்பண்ணையைசேர்ந்த விஜயசாந்தி 35, இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்த போது இறந்துவிட்டதால்இரு மகள்களுடன் வேலையின்றி சிரமப்படுகிறேன். சத்துணவு மையத்தில் பணி வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
மோர்பண்ணை காளிகோயில் தெருவை சேர்ந்த மருதமலை மனைவி விஜயசாந்தி 35, மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் பக்ரைன்நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்றிருந்த போது அங்கு இறந்து விட்டார். எனது இரு மகளும் பள்ளியில் படிக்கின்றனர். குடும்பத்தில் வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம்.
மோர்பண்ணை கிராமத்தில் அரசு பள்ளியில் சமையல் வேலை செய்யும் வேலை காலி பணியிடம் உள்ளது. எனக்கு அந்த வேலையை வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.