/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
/
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
ADDED : ஜூலை 01, 2025 02:28 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த தொண்டியைச் சேர்ந்த காளீஸ்வரி 45, மாவட்ட வருவாய் அலுவலர் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
தொண்டி அருகேயுள்ள புதுக்குடி சேர்ந்த செந்தில்குமார் மனைவி காளீஸ்வரி 45. இவர் நேற்று கலெக்டர் குறைதீர்க்கும் கூட்டத்தில் இரு குழந்தைகளுடன் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென சேலையில்  மறைத்துவைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அலுவலர்கள் போலீசார்  காப்பற்றினர். போலீசார்  அழைத்து சென்றனர். விசாரணையில் தனது கணவர் செந்தில்குமார் மீது  தொடர்ந்து போலீசார் கஞ்சா வழக்கு பதிகின்றனர்.  அவ்வழக்குகளை ரத்துசெய்யக்கோரி மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் மனு வாங்கி கொண்டிருந்தபோது,  தீக்குளிக்க முயன்றுள்ளார்.
தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்காக காளீஸ்வரி மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர்.

