ADDED : ஜன 23, 2026 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே நம்பு தாளை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா 26. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பழனி 29. இருவருக்கும் நீண்ட நாட்களாக பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது. இது தொடர்பாக இரு வருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பழனி, பவித்ராவை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாகத் தாக்கினார். இதில் காயமடைந்த பவித்ரா தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். பவித்ரா புகாரில் தொண்டி போலீசார் தலைமறைவாக இருந்த பழனியை கைது செய்தனர்.

