/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடிநீர் குழாயில் உயிருடன் மீன் குஞ்சுகள்;பெண்கள் அதிர்ச்சி
/
குடிநீர் குழாயில் உயிருடன் மீன் குஞ்சுகள்;பெண்கள் அதிர்ச்சி
குடிநீர் குழாயில் உயிருடன் மீன் குஞ்சுகள்;பெண்கள் அதிர்ச்சி
குடிநீர் குழாயில் உயிருடன் மீன் குஞ்சுகள்;பெண்கள் அதிர்ச்சி
ADDED : டிச 26, 2024 04:38 AM
திருவாடானை: தெருக்குழாய்களில் சப்ளை ஆன குடிநீரில் உயிருடன் மீன் குஞ்சுகள் வந்ததால் பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, சிநேகவல்லிபுரம், சூச்சனி, ஆதியூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தெருக்குழாய்களில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. நேற்று சப்ளை ஆன நீரில் சிறிய மீன் குஞ்சுகள் உயிருடன் வந்தன. பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருவாடானை மேலரதவீதி பெண்கள் கூறியதாவது: நேற்று குடிநீர் பிடித்த போது மீன குஞ்சுகள் வந்தன. இதனால் அந்த தண்ணீரை சமையலுக்கும், குடிக்கவும் பயன்படுத்த முடியவில்லை. ஆங்காங்கே குழாய் உடைப்பில் ஆற்று நீர் கலந்து வருவதால் மீன்கள் வந்திருக்கலாம். அலுவலர்கள் நீர்த் தேக்க தொட்டியை சுத்தபடுத்தி தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.