/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலர் நிறுத்தும் இடமாக மாறி வருவதால் பெண்கள் அவதி
/
டூவீலர் நிறுத்தும் இடமாக மாறி வருவதால் பெண்கள் அவதி
டூவீலர் நிறுத்தும் இடமாக மாறி வருவதால் பெண்கள் அவதி
டூவீலர் நிறுத்தும் இடமாக மாறி வருவதால் பெண்கள் அவதி
ADDED : ஏப் 07, 2025 06:55 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் தாய்மார்கள் பாலுாட்டும் அறை முன்பு டூவீலர் நிறுத்தும் இடமாக மாற்றி வருவதால் பெண்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துாரில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, விருதுநகர், ராமேஸ்வரம், திருச்செந்துார் உட்பட பல்வேறு ஊர்களுக்கு தினந்தோறும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
முதுகுளத்துார் வட்டாரத்தில் சுற்றியுள்ள பகுதியில் இருந்து தினந்தோறும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருந்து பஸ்சில் செல்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாய்மார்கள் பாலுாட்டும் அறை திறக்கப்பட்டு பெண்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. தற்போது தாய்மார்கள் பாலுாட்டும் அறை முன்பு டூவீலர், கார்கள் நிறுத்துவதால் செல்வதற்கே சிரமப்படுகின்றனர். டூவீலர் நிறுத்துமிடமாக மாறி வருகிறது.
மேலும் பாலுாட்டும் அறையை முறையாக பராமரிக்காததாலும் திறந்த வெளியாக உள்ளது. இதனால் பெண்கள் முகம் சுளிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், முறையாக பராமரிக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

