/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அருகே கிராமங்களில் தண்ணீர் தேடி அலையும் பெண்கள்
/
பரமக்குடி அருகே கிராமங்களில் தண்ணீர் தேடி அலையும் பெண்கள்
பரமக்குடி அருகே கிராமங்களில் தண்ணீர் தேடி அலையும் பெண்கள்
பரமக்குடி அருகே கிராமங்களில் தண்ணீர் தேடி அலையும் பெண்கள்
ADDED : ஜூன் 06, 2025 11:54 PM

பரமக்குடி: பரமக்குடி அருகே கிராமங்களில் ஒவ்வொரு நாளும் குடங்களுடன் கிராம மக்கள் தண்ணீர் தேடி அலையும் நிலை உள்ளது.
பரமக்குடி, நயினார்கோவில், போகலுார் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு பல நுாறு கிளை கிராமங்கள் இயங்குகிறது. மக்கள் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் ஒன்றையே தொழிலாக கொண்டுள்ளனர். கூலி வேலைக்கு செல்வோரும் அதிகளவில் இருக்கின்றனர்.
தொடர்ந்து கிராமப் பகுதிகளில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ஆனால் ஆங்காங்கே குழாய்களில் உடைப்பு ஏற்படுவது தீர்வு காண முடியாத ஒன்றாக உள்ளது.
தற்போது கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இவையும் பராமரிக்க முடியாமல் மிஷின்கள் பழுதடைவதுடன் விட்டு விடுகின்றனர்.
பல கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் அமைந்த சூழலில், லட்சங்கள் செலவழித்து அமைக்கப்படும் சுத்திகரிப்பு நிலையங்களையும் சீரமைக்க கிராம நிர்வாகங்கள் மறுக்கின்றனர். ஒவ்வொரு நாளும் தண்ணீர் கிடைக்காத மக்கள் அருகிலுள்ள பகுதியில் குடிநீருக்காக அலையும் நிலை உள்ளது. மேலும் குடம் 15 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கும் சூழல் அதிகரித்துஉள்ளது.
ஆகவே கூட்டு குடிநீர் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு ஆகியவற்றை அனைத்து கிராமத்திலும் முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு மக்களின் அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.