/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வட்டி ஆசையில் பல லட்சம் பணத்தை இழந்த பெண்கள் கலெக்டரிடம் புகார்
/
வட்டி ஆசையில் பல லட்சம் பணத்தை இழந்த பெண்கள் கலெக்டரிடம் புகார்
வட்டி ஆசையில் பல லட்சம் பணத்தை இழந்த பெண்கள் கலெக்டரிடம் புகார்
வட்டி ஆசையில் பல லட்சம் பணத்தை இழந்த பெண்கள் கலெக்டரிடம் புகார்
ADDED : ஏப் 29, 2025 05:05 AM

ராமநாதபுரம்: தேவிபட்டினம் அருகே கழனிக்குடியை சேர்ந்த சிலர் நிதி நிறுவனம் நடத்தவதாகவும், அதிக வட்டி ஆசைக்காட்டி பல லட்சம் பணத்தை ஏமாற்றியதாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கழனிக்குடியைச் சேர்ந்த புவனேஸ்வரி, சசிகலா, சகுந்தலா, ரேணுகா, பஞ்சவர்ணம், சத்தியவாணி, பாகம்பிரியாள் உள்ளிட்ட பெண்கள் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோனிடம் புகார் மனு அளித்தனர். இதில், அதே ஊரைச் சேர்ந்த சிலர் (கணவர் நாராயணசாமி, மனைவி பிரேமா ஆகியோர்) பைனான்ஸ் நிறுவனம் நடத்துவதாக கூறி 100க்கு ரூ. 2 வட்டி என 50க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் பணம் வசூலித்தனர்.
அதற்குரிய வட்டியை கேட்ட போது அவர்கள் பைனான்ஸ் வைத்துள்ளதாக பொய் சொல்லி ஏமாற்றியது தெரிய வந்தது. இது தொடர்பாக தேவிபட்டினம் போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. பணம் வாங்கியவர்கள் ஊரை விட்டு ஓடிவிட்டனர்.
எனவே அவர்களை பிடித்து நாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.