/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுத மக்களிடம் ரூ.100 வசூல் தடுக்க மகளிர் குழு நியமனம்
/
கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுத மக்களிடம் ரூ.100 வசூல் தடுக்க மகளிர் குழு நியமனம்
கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுத மக்களிடம் ரூ.100 வசூல் தடுக்க மகளிர் குழு நியமனம்
கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுத மக்களிடம் ரூ.100 வசூல் தடுக்க மகளிர் குழு நியமனம்
ADDED : டிச 30, 2025 05:20 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வரும் மக்களிடம் ஒரு மனு எழுதித்தர சிலர் ரூ.50 முதல் ரூ.100 வரை வசூலிக்கின்றனர்.
இதை தடுக்கும் வகையில் இந்த வாரம் முதல் மக்களுக்கு உதவிட மகளிர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் மனு அளிக்க நகர், கிராமங்களில் ஏராளமானவர்கள் வருகின்றனர். அவர்களிடம் மனு எழுதிதருவதற்கு சிலர் ரூ.50 முதல் ரூ.100 வசூலிக்கின்றனர்.
நேற்றும் மனு எழுதிதர ஒருவர் ரூ.100 வசூலித்தார். இதுதொடர்பாக மூதாட்டி புகாரில் போலீசார் அவரை கண்டித்து பணத்தை மீட்டு கொடுத்தனர்.
இம்மாதிரியான செயல்களை தடுக்க மகளிர் திட்டம் மூலம் போகலுார் ஒன்றியத்தை சேர்ந்த மகளிர்கள் நேற்று இலவசமாக பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்தனர். அவர்கள் போலீசார் சோதனைசாவடியை தாண்டி உள்வளாகத்திற்குள் எழுதி தருவதால் மக்களுக்கு விபரம் தெரியாமல் வெளிநபர்களிடம் மனு எழுதுவதற்கு பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைகின்றனர்.
எனவே திங்கட்கிழமை மட்டும் வெளிநபர்கள் மனு எழுதித்தர தடை விதிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தெரியும்படி போலீசார் சோதனைச்சாவடிக்கு வெளியே மக்கள் உள்ளே வரும் பகுதியில் மகளிர் குழுவினர் அமர்ந்து மனு எழுதித்தர கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.

