தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மகளிர் தினவிழா கொண்டாட்டம்

 மகளிர் தினவிழா கொண்டாட்டம்

 மகளிர் தினவிழா கொண்டாட்டம்


ADDED : மார் 11, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: தமிழ்நாடு சமூக நலத்துறை ஓய்வூதியர்கள் நல அமைப்பு சார்பில் ராமநாதபுரம் அருகே பாரதிநகரில் தனியார் மண்டபத்தில் உலக மகளிர் தினவிழா, 3ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.

அமைப்பின் மாவட்ட தலைவர் சாவித்திரி தலைமை வகித்தார். செயலாளர் அசோகன், அரசு மருத்துவக்கல்லுாரி உதவிப் பேராசிரியை டாக்டர் நந்தினி, குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் விசுபாவதி முன்னிலை வகித்தனர். மதுரை பாரதி இன்பினிட்டி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம், மாணவியர் கலை நிகழ்ச்சி, மெகந்தி விழா உள்ளிட்டவை நடந்தது. ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி, அமைப்பின் மகளிர் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். துணைத்தலைவர் ரேகா நன்றி கூறினார்.

*திருவாடானை நீதிமன்றத்தில் சர்வதேச மகளிர் தினவிழா நடந்தது. நீதிபதி ஆன்டனிரிஷந்தேவ் தலைமை வகித்தார். மூத்த வக்கீல் சிவராமன் முன்னிலை வகித்தார். வக்கீல் சங்கத் தலைவர் சுரேஷ் வரவேற்றார். விழாவையொட்டி பெண் வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பெண் பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் வக்கீல் கலா மற்றும் அரசு குற்றவியல் வக்கீல் ஜூடியோ ஏஞ்சலின் பேசுகையில், நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக சட்டத்துறையில் பெண்கள் தங்களது உரிமைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்று பேசினர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை வக்கீல் சங்கத்தினர் செய்திருந்தனர். ---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us