ADDED : மார் 12, 2026 05:00 AM
ராமநாதபுரம்: தமிழ்நாடு சமூக நலத்துறை ஓய்வூதியர்கள் நல அமைப்பு சார்பில் ராமநாதபுரம் அருகே பாரதிநகரில் தனியார் மண்டபத்தில் உலக மகளிர் தினவிழா, 3ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.
அமைப்பின் மாவட்ட தலைவர் சாவித்திரி தலைமை வகித்தார். செயலாளர் அசோகன், அரசு மருத்துவக்கல்லுாரி உதவிப் பேராசிரியை டாக்டர் நந்தினி, குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் விசுபாவதி முன்னிலை வகித்தனர். மதுரை பாரதி இன்பினிட்டி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம், மாணவியர் கலை நிகழ்ச்சி, மெகந்தி விழா உள்ளிட்டவை நடந்தது. ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி, அமைப்பின் மகளிர் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். துணைத்தலைவர் ரேகா நன்றி கூறினார்.
*திருவாடானை நீதிமன்றத்தில் சர்வதேச மகளிர் தினவிழா நடந்தது. நீதிபதி ஆன்டனிரிஷந்தேவ் தலைமை வகித்தார். மூத்த வக்கீல் சிவராமன் முன்னிலை வகித்தார். வக்கீல் சங்கத் தலைவர் சுரேஷ் வரவேற்றார். விழாவையொட்டி பெண் வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பெண் பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் வக்கீல் கலா மற்றும் அரசு குற்றவியல் வக்கீல் ஜூடியோ ஏஞ்சலின் பேசுகையில், நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக சட்டத்துறையில் பெண்கள் தங்களது உரிமைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்று பேசினர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை வக்கீல் சங்கத்தினர் செய்திருந்தனர்.
*ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சர்வோதயா அறக்கட்டளை 7வது நிறுவன நாள், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அறக்கட்டளை தலைவர் பாப்பா, சி.இ.ஓ., ராஜன் ஆகியோர் அமைப்பின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினர். சர்வோதயா அறக்கட்டளை செயலாளர் பெத்தநாச்சி வரவேற்றார்.
சிறந்த பணியாளர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. வங்கி அதிகாரிகள் பங்கேற்று சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகள் மற்றும் மகளிர் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்தனர். அறக்கட்டளை பொருளாளர் நாகராணி நன்றி கூறினார்.
*கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் முதல்வர் நிர்மல் கண்ணன் தலைமை வகித்தார். துணை முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். டீன் அகாடமிஸ் திராவிட செல்வி வரவேற்றார். ராமேஸ்வரம்
ஏ.எஸ்.பி., மீரா பங்கேற்று மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார். கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கவிதை போட்டி, பேச்சு போட்டி, கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவைகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பேராசிரியர்கள் ஆய்வக உதவியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மின்னியல் தொடர்பு பேராசிரியர் சரோஜினி தேவி நன்றி கூறினார்.
