தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 08, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாநில திட்ட மேலாண்மை அலகு அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம் வட்டார இயக்க மேலாளர் சந்திரபோஸ் தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதம் ரூ.12,000, வட்டார இயக்க மேலாளர்களுக்கு ரூ.15,000 ஊதியமாக வழங்கப்படுகிறது. தற்போதை விலைவாசி உயர்வில் இது போதாதது. எனவே மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். சங்க நிர்வாகிகள் மயில்ராஜ், ராஜாகோபால், மணிமாலா உட்பட பணியாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us