/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் காத்திருப்பு போராட்டம்
/
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் காத்திருப்பு போராட்டம்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் காத்திருப்பு போராட்டம்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 30, 2025 10:32 PM
தேவிபட்டினம்; தேவிபட்டினம் அருகே அழகன்குளம் நாடார்வலசையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியில் பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடார்வலசை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையால் குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டு வருவதால் அந்த மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த ஓராண்டிற்கும் மேலாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின் போது சில மாதங்களில் கடையை அகற்றி விடுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இந்நிலையில் கடை அகற்றப்படாததால் நேற்று விமன் இந்தியா மூவ்மென்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் தலைமையில் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தீர்வு ஏற்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்தனர்.
மேலும் ஆளும் தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களிடம் இது குறித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆளுங்கட்சிக்கு கண்டனம் தெரிவித்தனர். எஸ்.டி.பி.ஐ., கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான், திருவாடானை சட்டசபை தொகுதி தலைவர் முகமது ஹனீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.