/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகளிர் உரிமைத்தொகை தரவில்லை குறைதீர் கூட்டத்தில் பெண்கள் மனு
/
மகளிர் உரிமைத்தொகை தரவில்லை குறைதீர் கூட்டத்தில் பெண்கள் மனு
மகளிர் உரிமைத்தொகை தரவில்லை குறைதீர் கூட்டத்தில் பெண்கள் மனு
மகளிர் உரிமைத்தொகை தரவில்லை குறைதீர் கூட்டத்தில் பெண்கள் மனு
ADDED : பிப் 28, 2024 05:38 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் பரமக்குடி பணிதவயல் கிராமப் பெண்கள் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் மனு அளித்தனர்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 24 பேருக்கு ரூ.23 லட்சத்து 4000 மதிப்பில் இணைப்பு சக்கர டூவீலர்கள், வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 30 பேருக்கு ெஹல்மட்டை கலெக்டர் வழங்கினர்.
பரமக்குடி தாலுகா பணிதவயல் கிராமப் பெண்கள் விண்ணப்பம் செய்தும் இதுவரை மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கவில்லை.
அனைவரும் கூலி வேலைதான் செய்கிறோம், விரைவில் உரிமைத்தொகை வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
கடலாடி தாலுகா ஒப்பிலான் கிராம மக்கள் எஸ்.டி.பி.ஐ., மேற்கு மாவட்ட தலைவர் நுாரூல் அமின் தலைமையில் மனு அளித்தனர்.
இதில் ஒப்பிலானில் வாலிநோக்கம் சாலையின் தென்புறம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடிருக்கிறோம். அனைத்து வரிகள், கட்டணம் செலுத்துகிறோம். தற்போது வனத்துறைக்கு சொந்தமான இடம் என காலி செய்யக் கூறுகின்றனர்.
எனவே கலெக்டர் எங்களுக்கு பட்டா வழங்க வண்டும் என வலியுறுத்தினர்.
இதே போல வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட 318 மனுக்கள் பெறப்பட்டன.
சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மாரிச்செல்வி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், வட்டார போக்குவரத்து அலுவலர் ேஷக் முகமது பங்கேற்றனர்.

