/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை: நாளை சிறப்பு முகாம்
/
மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை: நாளை சிறப்பு முகாம்
மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை: நாளை சிறப்பு முகாம்
மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை: நாளை சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 01, 2025 11:05 PM
ராமநாதபுரம்: மாவட்ட சமூகநலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் நாளை (ஜூன் 3ல்) கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத பெண்கள், ஆதரவற்ற மகளிர்களுக்கான வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடக்கிறது.
11 வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் நாளை காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரைநடைபெற உள்ளது. இம்முகாமில் பங்கேற்று தங்களது விபரங்களை கீழ்காணும் இணையதளத்தில் www.tnwidowswelfareboard.tn.gov.in பதிவு செய்ய வேண்டும்.
அப்போது பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் கார்டு, விதவைச் சான்று, கணவனால் கைவிடப்பட்டதற்கான சான்று, ரேஷன் கார்டு, அலைபேசி கொண்டு வர வேண்டும். பதிவு செய்யும் பட்சத்தில் ஆதரவற்ற மகளிர் தங்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 50 வயதிற்குற்பட்ட பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு வங்கி கடன் பெறுவதற்கு உரிய வழிகாட்டப்படும். தகுதியுள்ள பெண்கள் தங்களது பகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஜூன் 3ல் நடைபெறும் சேர்க்கை முகாமில் கலந்து பயன்பெறலாம்.