/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெடுஞ்சாலையில் கிடக்கும் மரக்கட்டைகளால்...மக்களுக்கு இடையூறு: அகற்றி ஏலமிட அதிகாரிகள் முன்வர வேண்டும்

ADDED : ஆக 21, 2025 11:11 PM

ராமநாதபுரம் நகர் மற்றும் பட்டணம் காத்தான், சக்கரகோட்டை, சூரன் கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் போக்கு வரத்து மிகுந்த ராமேஸ் வரம் ரோடு, மதுரை ரோடு, நயினார்கோவில், தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களில் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் வேம்பு, புங்கன், புளி உள்ளிட்ட நிழல் தரும் ஏராளமான மரங்கள் உள்ளன. பல இடங்களில் மின்கம்பியை உரசும் வகையிலும், சில மரங்கள் பட்டு போயும், மரக் கிளைகள் முறியும் நிலையில் உள்ளன.
இது போன்ற இடங்களை கண்டறிந்து கோட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்கு வரத்திற்கு இடையூறாக வளர்ந்துள்ள மரக் கிளைகள் மற்றும் பட்டுபோன மரங்களை அகற்றப் பட்டு துண்டு, துண்டாக வெட்டப்பட்டு ரோட் டோரம் கிடக்கின்றன.
அவை பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் நடந்து செல்வதற்கு சிரமப் படுகின்றனர்.
எனவே நகர், புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கிடக்கும் மரக்கட்டைகளை சேகரித்து அவற்றை ஏலமிட சம்பந்தபட்ட நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.