தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாவட்ட மைதானத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணிகள் துவக்கம்

 மாவட்ட மைதானத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணிகள் துவக்கம்

 மாவட்ட மைதானத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணிகள் துவக்கம்


ADDED : மே 23, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 03:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணியில் முதற்கட்டமாக மண் கொட்டி தரையை உயர்த்தி சமன்படுத்தும் பணி நடக்கிறது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இங்குள்ள ஓடுதளம் மண் தரையாக உள்ளதால் மாநில, தேசிய அளவிலான ஓட்டப்பந்தயப் போட்டிகளுக்கு பயிற்சி எடுக்க மதுரை, கோவை போன்ற வெளி மாவட்டங்களுக்கு சென்று வர வீரர்கள் சிரமப்படுகின்றனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் விளையாட்டு மைதானத்தில் ரூ.12 கோடியே 35 லட்சத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்க ஜன.,5 ல் பூமிபூஜை நடந்தது. அதன் பிறகு சட்டசபை தேர்தல் காரணமாக பணிகள் துவங்கப்படாமல் அப்படியே விடப்பட்டது.

இந்நிலையில் சில நாட்களாக லாரிகளில் மண் கொண்டு வந்து செயற்கை ஓடும் தளம் அமைக்கப்படும் இடத்தை மழைநீர் தேங்காத வகையில் தரைத்தளத்தை உயர்த்தும் பணி நடக்கிறது. இதையடுத்து செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணி 4 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us