/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயணியர் நிழற்குடை கட்டும் பணி மும்முரம்
/
பயணியர் நிழற்குடை கட்டும் பணி மும்முரம்
ADDED : நவ 28, 2024 05:02 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார்-அபிராமம் ரோடு மேலபண்ணைக்குளம் விலக்கு ரோட்டில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பயணியர் நிழற்குடை கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது.
முதுகுளத்துார் அருகே மேல பண்ணைக்குளம், கீழ பண்ணைக்குளம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு பஸ் வசதி இல்லாததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் செல்வதற்கும் 2 கி.மீ., நடந்து வந்து முதுகுளத்துார் அபிராமம் ரோடு மேலபண்ணைக்குளம் விலக்கு ரோட்டில் பயணியர் நிழற்குடையில் காத்திருந்து சென்றனர்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிழற்குடை பராமரிப்பின்றி இருந்ததால் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. கடந்த சில மாதத்திற்கு முன் நிழற்குடை கட்டடம்இடிக்கப்பட்டது. புதிய நிழற்குடை கட்ட வேண்டும் என்று தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மேலபண்ணைக்குளம் விலக்கு ரோட்டில் புதிதாக பயணியர் நிழற்குடை கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.