தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார் வரை 1914 முதல் 1964 வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்தது. 1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின் 1967 முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவக்கப்பட்டது.
இலங்கையில் ராணுவம், விடுதலைப் புலிகள் இடையே போர் தீவிரமடைந்ததால் 1984 முதல் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து துவக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியது.
இதற்காக 4 மாதங்களுக்கு முன்பு பயணிகள் கப்பலுக்கு செல்வதற்கான பாலம் அமைக்க ராமேஸ்வரம் கடலில் தமிழ்நாடு கடல் சார் வாரியம் மண் பரிசோதனை செய்தது. இதனை தொடர்ந்து கடலோரத்தில் ஆக்கிரமித்துள்ள மீனவர்களின் மீன்பிடி வலைகள், தளவாட பொருள் உள்ள குடிசைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதன் பின் கடற்கரையில் பாலம் கட்டவோ, ஆக்கிரமிப்புகளை அகற்றி பூர்வாங்க பணிகளை துவக்காமல் தமிழக அரசு கிடப்பில் போட்டு விட்டது.
இதனால் கப்பல் போக்குவரத்திற்கான இத்திட்டம் துவக்க பணியும் தள்ளிப் போகும் நிலையில் உள்ளது.
ராமேஸ்வரம், மே 19-- -
ராமேஸ்வரம்- இலங்கை தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்திற்கான துவக்க பணிகள் மந்தமாக நடக்கிறது.