ADDED : ஜூலை 10, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்; திருவாடானை அருகே மல்லிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் 65, கட்டடங்களுக்கு டைல்ஸ் கற்கள் பதிக்கும் தொழிலாளி. இவர் நேற்று கடுக்களூர் பகுதியில் ஒரு கட்டடத்தில் வேலை செய்தார். டைல்ஸ் கற்களை வெட்டுவதற்காக மின்சாரம் மூலம் இயக்கப்படும் இயந்திரத்தை பயன்படுத்தி பணிகளை மேற்கொண்டார்.
அப்போது மின்சாரம் தாக்கி சக்திவேல் படுகாயம் அடைந்தார். திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சக்திவேல் பலியானார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.