ADDED : ஆக 04, 2026 09:50 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் நல்லுக்குறிச்சியை சேர்ந்த பாக்கியம் மகன் தட்சிணாமூர்த்தி 35. கூலி தொழிலாளி. இவர் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி பாலியல் தொல்லை செய்துள்ளார். சிறுமியின் தந்தை புகாரில் அபிராமம் போலீசார் போக்சோ சட்டத்தில் தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தட்சிணாமூர்த்திக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.4000 அபராதம் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார்.
