தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தொழிலாளர்களுக்கு கோடைகால உரிமை தொகை வழங்க வேண்டும்

 தொழிலாளர்களுக்கு கோடைகால உரிமை தொகை வழங்க வேண்டும்

 தொழிலாளர்களுக்கு கோடைகால உரிமை தொகை வழங்க வேண்டும்


ADDED : மார் 09, 2026 07:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 07:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பி.எம்.எஸ்., கோரிக்கை

பரமக்குடி: தமிழகத்தில் மகளிர் மற்றும் முதியோருக்கு கூடுதல் தொகை வழங்கப்படும் நிலையில், உழைக்கும் தொழிலாளர்களுக்கும் பாகுபாடின்றி வழங்க வேண்டும் என பி.எம்.எஸ்.,(பாரதிய மஸ்தூர் சங்கம்) சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு 2023 செப்.,ல் துவங்கி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதுடன் திட்டத்தில் ஏராளமான மகளிர் இணைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு 3 மாதத்திற்கான தொகை 3000 மற்றும் கோடை கால உதவி தொகை என 2000 ரூபாய் வழங்கப்பட்டது.

இதே போல் முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை பெறும் நிலையில், தற்போது சிறப்பு நிதியாக அனைவருக்கும் ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 60 வயது பூர்த்தி அடைந்து பென்ஷன் பெறும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் நல வாரிய உறுப்பினர்களுக்கும், மீன்வளத் துறையின் கீழ் ஓய்வூதியம் பெறும் மீனவர்களுக்கும் கோடை கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

ஆண்டு முழுவதும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஓரவஞ்சனை செய்யாமல், தமிழக அரசு உடனடியாக ஊக்கத் தொகையாக 2000 ரூபாயை வழங்க வேண்டும் என பி.எம்.எஸ்., மாநில நிர்வாகி காசிவிஸ்வநாதன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us