/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதியில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு ஆலோசனை
/
கமுதியில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு ஆலோசனை
ADDED : ஜன 14, 2025 08:00 PM
கமுதி:
கமுதியில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பால்சாமி தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:
மக்கள் கூட்டமைப்பின் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.,பிப்., மாதங்களில் தேசிய அளவில் பிரசாரம் நடைபெற உள்ளது.
தேசிய அளவிலான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்ய ஜன. 24 ல் கன்னியாகுமரியில் துவங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பிரசார பயணம் நடத்துவது எனவும், கமுதியில் ஜன.,28ல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மாநாடு நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அமைப்பு சாரா தொழிலாளர்களை ஒருங்கிணைப்பது கூட்டமைப்பின் முக்கியமான நோக்கம் என்றார்.
உடன் பல்வேறு தொழில்கள் செய்யக்கூடிய அமைப்பு சாரா தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், பனைமரத் தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள், தையல் கலைஞர்கள், கைவினை கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் செய்தனர். முடிவில் நிர்வாகி அருள்ராஜ் நன்றி கூறினார்.