/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உலக புத்தக தின விழா மாணவர்களுக்கு போட்டி
/
உலக புத்தக தின விழா மாணவர்களுக்கு போட்டி
ADDED : ஏப் 21, 2025 05:44 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்ட மைய நுாலகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நுாலக வாசகர் வட்டம் சார்பில் நடந்த உலக புத்தக தினவிழாவில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் காந்தி தலைமை வகித்தார்.
மாவட்ட நுாலக அலுவலர் பாலசரஸ்வதி, நுாலகர் அனிதா முன்னிலை வகித்தனர்.
ஓவியப்போட்டி, கதை சொல்லும் போட்டிகள் நடந்தது.
வாசகர் வட்டத்தலைவர் மங்கலசுந்தரமூர்த்தி, பொருளாளர் கவிஞர் மாணிக்கவாசகம், உறுப்பினர் கலைச்செல்வன், அழகுடையான், ஆசிரியர்கள் விஜயராம், சாகுல், சசிக்குமார், வின்சென்ட், மலைச்சாமி, பரமேஸ்வரன், குணசேகரன், ஓவியர் கணேசன்,நுாலக அலுவலர் அற்புதஞானருக்மணி, நுாலகர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

