ADDED : டிச 04, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் பள்ளி ஆயத்த பயிற்சி மைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் (அரசு தொடக்கப்பள்ளி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார். பலுான் உடைத்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தது. தலைமை ஆசிரியை ரேவதி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திக், ஒன்றிய மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்பாளர் காளமேகலை செய்திருந்தனர்.