ADDED : ஏப் 24, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் உலக பூமி தின விழா தலைமை ஆசிரியை பாக்கிய ரோசரி தலைமையில் நடந்தது.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து பூமி தின விழா கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்தும், புவி வெப்பமாவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கினர்.
செங்குடி, வரவணி ரோடு, பள்ளி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

