தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உலக சுற்றுச்சூழல் தின விழா

 உலக சுற்றுச்சூழல் தின விழா

 உலக சுற்றுச்சூழல் தின விழா


ADDED : ஜூன் 06, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 04:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட பல இடங்களில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எம்.ஜி., பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் பசுமை உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து மாவட்ட பள்ளி கல்வி அலுவலர் ரவி, பள்ளியின் நிறுவனர் டாக்டர் ஜி.சுப்பிரமணியம், முதல்வர் விஜயலெட்சுமி மற்றும் ஆசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

* ராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள ஐ.என்.ஏ., சரஸ்வதி மகளிர் பூங்காவில் பொருளாதார குற்றப் பிரிவு எஸ்.ஐ., சுபாஷ் சீனி வாசன் தலைமையில் அரசு சட்டக் கல்லுாரி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். இதில் ஆல மரம், அரச மரம், பலா, புன்னை, சரக்கொன்றை, மா, கொய்யா, செம்மரம், சந்தனம், புளி, வேம்பு, மகாகனி உள்ளிட்ட 25க் கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடப்பட்டன.

தொடர்ந்து மரக்கன்று நடுவதன் அவசியம், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

*ஆர்.எஸ்.மங்கலம் அருகே, செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், மாணவர் களுக்கு உள்ள பங்களிப்பு குறித்தும் தலைமை ஆசிரியை பாக்கிய ரோசரி விளக்கினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப் பாளர் கருணாகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

* ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான நம்புநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் மர இலைகள், பாலிதீன் கழிவுகளை பாஜ., வினர் சேகரித்து குவித்தனர். பின் சேகரித்த குப்பையை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை கூடத்திற்கு கொண்டு சென்றனர். இந்த பணியில் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன், ராமேஸ்வரம் நகர் தலைவர் மாரி, பா.ஜ., கவுன்சிலர் சங்கர், மாவட்ட செயலாளர் மீராபாஸ்கர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் பாரதிராஜன், பெண்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us