/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உலக சுற்றுச்சூழல் தினவிழா: மரக்கன்று நடுதல்
/
உலக சுற்றுச்சூழல் தினவிழா: மரக்கன்று நடுதல்
ADDED : ஜூன் 06, 2025 11:55 PM

ராமநாதபுரம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கலெக்டர்அலுவலக வளாகம் மற்றும் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
ராமநாதபுரம் கலெக்டர்அலுவலக வளாகத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மரக்கன்று நட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆறுமுகம் பங்கேற்றனர்.
* ராமநாதபுரம் சேதுபதி நகர் அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திரிபுரசுந்தரி மியாவாக்கி குறுங்காடுகள் அமைக்கும் விதமாக மரக்கன்றுகள் நடவு செய்து பணியை துவக்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பத்மா, ஸ்ரீ மதி, ஆயிசா, பச்சை குடை இயக்க நிர்வாகிகள்பங்கேற்றனர். பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடுகளை செய்தார்.
* ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டக்குழு, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலகச் சுற்றுச்சூழல் தினவிழா நடந்தது. முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் வள்ளி விநாயகம் வரவேற்றார்.
கல்லுாரி வளாகத்தை சுற்றிலும் 40 மரக்கன்றுகள் நடப்பட்டன. அனைவரும் சுற்றுச்சூழல்சார்ந்த உறுதிமொழி எடுத்தனர். தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா பேசினர். கல்லுாரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா ஏற்பாடுகளை செய்தனர்.
* தொருவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் வில்சன்சமாதானக்குமார் வரவேற்றார். முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உடற்கல்வி ஆசிரியர் முத்து சரவணன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
*ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில் பேச்சுப்போட்டி, ஓவிய போட்டிகள் நடந்தது. பின் பள்ளி வளாகத்தில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டது. 2024--25ம் கல்வி ஆண்டில் 10, பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் கணேச பாண்டியன், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், யாத்திரை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
*ரெகுநாதபுரம் ஊராட்சி மணியக்காரன் வலசை வில்வ முத்துமாரியம்மன் கோயிலில் உழவாரப்பணி நடந்தது. உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு திருப்புல்லாணி ஒன்றிய பா.ஜ., சார்பில் விழா நடந்தது. ஒன்றிய தலைவர் மங்களேஸ்வரன் தலைமை வகித்தார்.
ஒன்றிய துணைத் தலைவர் செந்தில் பிரகாஷ் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் மதுரை வீரன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம், கிளை தலைவர் யுவராஜன், செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.