
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்டிரா இளநிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த உலக வன நாள் தினத்தையொட்டி வனச்சரக அலுவலர்கள் மரக்கன்றுகள் நட்டனர். சவுராஷ்டிரா கல்விக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரெங்கன் முன்னிலை வகித்தார். இளநிலைப் பள்ளி தாளாளர் மாருதிராம் வரவேற்றார்.
பரமக்குடி வனச்சரக அலுவலர் அன்பரசி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பேசினார். கல்விக்குழு நிர்வாகி கணேஷ்பாலாஜி, வனவர்கள் தேவக்குமார், வீராச்சாமி, ராதாகிருஷ்ணன், ரவிக்குமார் வாழ்த்தினர். தலைமை ஆசிரியை புஷ்பவள்ளி நன்றி கூறினார்.