/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நரசிங்கக்கூட்டம் பள்ளியில் உலக மரபு வாரம்
/
நரசிங்கக்கூட்டம் பள்ளியில் உலக மரபு வாரம்
ADDED : நவ 27, 2024 06:45 AM
கடலாடி: கடலாடி அருகே நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு நாணய கண்காட்சி நடந்தது.
உலக மரபு வாரம் ஒவ்வொரு ஆண்டும் நவ.19 முதல் 25 வரை கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் அந்நாட்டில் உள்ள பலவகை இனம், மொழி ஆகியவற்றால் வளமான பண்பாடு, வரலாறு இருக்கும். அவற்றைப்பற்றி அறிந்து கொள்ளும் விதமாக மரபு வார விழா கொண்டாடப்படுகிறது.
மாணவர்கள் பழமையை அறிந்து கொள்ளும் விதமாக நாணய கண்காட்சி நடந்தது. அதில் பாண்டியர், ராஜராஜ சோழன் நாணயங்கள் பழமையான பிரிட்டீஷ், இந்திய நாணயங்கள் தற்காலத்தில் வெளியிடப்பட்ட தலைவர்களின் உருவங்கள் இடம்பெற்ற நாணயங்கள், வெளி நாட்டு நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் கூறியதாவது:
மரபுச் சின்னங்களை மாணவர்கள் அறிந்து கொள்வதன் மூலம் பள்ளி பாடப் புத்தகத்தையும் தாண்டி பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ளலாம். தினமலர் நாளிதழில் வெளி வரும் பட்டம் இதழை மாணவர்களுக்கு வாசிப்பதற்கு கொடுக்கிறோம்.
என்னிடம் சேகரிப்பில் உள்ள ஓலைச்சுவடிகள் மற்றும் பழமையான ஒரே மரத்தால் செய்யப்பட்ட சங்கிலி வடிவிலான அகப்பை துாக்கி உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். இடைநிலை ஆசிரியர் ஜெசிந்தா உடனிருந்தார்.