/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவக் கல்லுாரியில் உலக மனநல தினவிழா
/
மருத்துவக் கல்லுாரியில் உலக மனநல தினவிழா
ADDED : அக் 12, 2024 04:31 AM

ராமநாதபுரம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி மனநோய் துறை, மதுரை அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம், ராமநாதபுரம் மருத்துவக்கல்லுாரி சார்பில், கல்லுாரி கூட்ட அரங்கத்தில் (அக்.,10ல்) உலக மனநல தினவிழா நடந்தது.
மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஹனுமந்த ராவ் தலைமை வகித்து காணொலி காட்சி வழியாக பேசினார். ராமநாதபுரம் மருத்துவக்கல்லுாரி டீன் அமுதா ராணி, ஆசிரியப் பொறுப்பாளர் மற்றும் நிர்வாகம் டாக்டர் கணேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆண்டிற்கான தீம், 'பணியிடத்தில் மனநலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது' என்ற தலைப்பில் டாக்டர்கள் பாரதி ராஜேந்திரன், இளவரசி ஆகியோர் பேசினர்.
மனநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒழிக்கவும் போட்டிகள், நடனம் நடந்தது. இருகல்லுாரி, மருத்துவமனை பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.